2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நுவரெலியாவில் இரண்டு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு

Editorial   / 2020 பெப்ரவரி 19 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா, நேஸ்பி தோட்டத்தில்  இருந்து இரண்டு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிறந்து ஒரு நாளேயான சிசுக்களின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பெண் சிசுவொன்றின் சடலத்தை மீட்டுள்ளனர்.

அதனையடுத்து, அங்கிருந்த பொதியொன்றை சோதனையிட்டபோது, பொதிக்குள்ளிருந்த மற்றுமொரு பெண் சிசுவின் சடலமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சிசுக்களை பிரசவித்த தாய் தொடர்பில் கண்டறியப்படாத நிலையில்,  சிசுவின் சடலங்களை 14 நாட்கள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X