Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 08 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் 8 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு விழா வௌ்ளிக்கிழமை (06) அன்று கொட்டகலையில் உள்ள தனியார் விழா மண்டபத்தில் நடைபெற்றது.
நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை மற்றும் ஹட்டன் டிக்கோயா நகர சபைகள், நுவரெலியா, கொட்டகலை, அகரபத்தனை, நோர்வுட், மஸ்கெலியா மற்றும் அம்பகமுவ உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 35 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முன் பதவியேற்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக பல கட்சிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தெரிவித்தார்.
மேலும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர் மற்றும் பிரதி தலைவர் பதவியை கட்சியே தீர்மானிக்கும் என்றும், உறுப்பினர்கள் இது தொடர்பாக எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தகூடாது என்றும், உறுப்பினர்கள் எப்போதும் வாக்காளர்களைப் பாதுகாத்து கட்சி ஒழுக்கத்தின்படி செயல்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா கூறினார்.
ரஞ்சித் ராஜபக்ஷ
7 minute ago
40 minute ago
42 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
40 minute ago
42 minute ago
46 minute ago