Janu / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது.
இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையர் (St. Clair) நீர்வீழ்ச்சிகளின் காட்சி தலங்களில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் நிறைந்து காணப்படுகின்றன.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, நீர்வீழ்ச்சிகளுக்கு அருகாமையில் செல்லும் ஒற்றையடி பாதைகள் பாதுகாப்பு பிரிவினரால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் செல்வதையோ அல்லது ஆபத்தான நீர்நிலைகளில் நீராடுவதையோ முற்றாக தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
நுவரெலியா வீதிகள் அதிக வளைவுகளை கொண்டிருப்பதனாலும், மாலை வேளைகளில் பெய்யும் மழை மற்றும் பனி மூட்டம் காரணமாகவும் வீதி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
புகையிரத பாதைகளில் ஏற்பட்டுள்ள சில தடங்கல்கள் காரணமாக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வழமைக்கு மாறாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தனிப்பட்ட வாகனங்களில் வருகை தந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
20 minute ago