2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்

Editorial   / 2024 செப்டெம்பர் 30 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன்

வலப்பனை, மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமலை வனப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மந்தாரம் நுவர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை (30) காலை திடீர் சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டனர்.

அதன்போது, சந்தேக நபர்கள்  தப்பிச்செல்ல முயற்றுள்ளனர். அதனையடுதே, பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். அதில் ஒருவர் காயமடைந்தார். தப்பிச்​சென்ற நால்வரையும் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இதில், தற்காலிகமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் உள்ளடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயடைந்தவர் (41) வயதுடையவர் எனவும் இவர்  ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி- போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மந்தாரம் நுவர பொலிஸார், நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X