Editorial / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
டீ.சந்ரு
சதொச நிறுவனத்தின் நுவரெலியாக் கிளையை உடைத்து, பொருட்களை திருடிய குற்றச்சாட்டில, நுவரெலியா பொலிஸாரால் நேற்று இரவு, மூன்று பேர் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, சுமார் 70,000 ரூபாய் பெறுமதியான பொருட்களையும், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கெப்பட்டிப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் ஒருவர், குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரென்றும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று இரவு, இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதென்றும் மேற்படி மூவரும், பொருட்களைத் திருடிக்கொண்டு ஓட்டோவில் தப்பிச் செல்வதாக வழங்கப்பட்டத் தகவலையடுத்து, நுவரெலியா மார்கஸ் தோட்டப் பகுதியில் வைத்து, முச்சக்கர வண்டியை வழிமறித்த பொலிஸார், பொருட்களுடன் மூவரைக் கைதுசெய்ததாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21 minute ago
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
2 hours ago