Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்தில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட 28 வேட்புமனுக்களில், அங்கிகரிக்கப்பட்ட ஓர் அரசியற் கட்சி, இரண்டு சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று, நுவரெலியா மாவட்டச் செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டச் செலகத்தில், அவரது உத்தியோகபூர்வ காரியாலயத்தில், நேற்று (19) நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட நுவரெலியா மாவட்டத்தில் 28 வேட்புமனுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன என்றும் இம்மனுக்கள், பகல் 12 மணிக்குப் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்தார். இதன்போது வேட்பு மனுக்கள் தொடர்பில் எட்டு ஆட்சேபனைகள் கிடைத்தன என்றும் அவைகள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நிராகரிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நுவரெலியா அஸ்கர் கான், லிந்துலை பெரியண்ணன் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான சுயேட்சைக் குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதுடன், ஆர்.ஏ.அபேரத்ன தலைமையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த லிபரல் கட்சியின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தேர்தல் சட்டத்தின் 19ஆவது சரத்தின் அடிப்படையில், மனுக்களுக்கான ஆவணங்களை முறையாகப் பூர்த்தி செய்யாததால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றார்.
தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை பாதிப்புகள் எதுவும் இல்லை என்றும் இதற்கென மாவட்ட ரீதியில் குழு ஒன்றை அமைத்துச் செயற்படுவதுடன் ஒவ்வொரு நாளும் மாலை நான்கு மணியளவில் இக்குழுவின் அறிக்கைகளும் கலந்துரையாடலும் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார். நேற்றைய தினம், கட்டுப்பாடுடன் நடந்துகொண்ட கட்சித் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago