டி. ஷங்கீதன் / 2020 மார்ச் 17 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை பலமுனைப் போட்டி நிலவுவதால், வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது அவசியம் என்று, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
சிறுபான்மை மக்கள் சிந்தித்து வாக்களிக்காவிட்டால், சிறுபான்மை பிரதிநிதித்துவம் குறைவடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று (17) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் எந்த ஒரு தேர்தலிலும் இல்லாத வகையில், பல முனைபோட்டி நிலவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் இதன் காரணமாக சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்றும் ஒருசிலர், கட்சிகளின் கைக்கூலிகளாகச் செயற்படுவதைக் காணமுடிவதாகவும் தெரிவித்தார்.
ஒரு சிலர், சுயேட்சை குழுக்களில் போட்டியிட்டு தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து பெரும்பான்மை வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கான ஓர் அடித்தளத்தை இட்டுவருவதாகவும் இதனை அவர்கள் சிந்தித்து செய்கின்றார்களா? அல்லது யாருடைய முகவர்களாக இருந்த செயற்படுகின்றார்களா? என்பது புரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago