Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 03 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி
நிவித்திக்கலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட நொரகல்ல தமிழ் வித்தியாலயத்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதற்தடவையாக மூன்று மாணவர்கள் சித்தியடைந்து சாதனைப்படைத்துள்ளனர் என அப்பாடசாலையின் அதிபர் பெருமாள் பரமசிவன் கூறினார்.
“மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள இப்பாடசாலையில்போதிய வளங்களும் தேவையான ஆசிரியர்களும் இல்லாத சூழ்நிலையில் 3 மாணவர்கள் சித்தியடைந்தது வரலாற்று சாதனையாகும்” என்றார்.
இப்பரீட்சையில் விஸ்வநாதன் டினுசன் என்ற மாணவன் 175 புள்ளிகள் பெற்று மாகாண மட்டத்தில் (தமிழ்மொழியில்) இரண்டாம் இடத்தையும் வலய மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.
விஸ்ணுகுமார் அக்ஸயா என்ற மாணவி 147 புள்ளிகளையும் நவரத்தினகுமார் மோக்ஸிதா என்ற மாணவி 144 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர் என்றார்.
சித்தியடைந்த மாணவர்களையும் வகுப்பாசிரியை பி.ஹரணியையும் அதிபர் பெருமாள் பரமசிவன் ஆகியோரையும் படத்தில் காணலாம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 May 2025