Freelancer / 2023 மார்ச் 10 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹலகம பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்த பதுளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர், குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டில் இருந்து 6,300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதே பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நோனா அக்கா என்ற பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்றைய தினம் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
36 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
4 hours ago