2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நோயாளி மீது அசிட் வீச்சு: ஐவர் காயம்

Editorial   / 2023 ஜூன் 28 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் மீது அசிட் வீசியதில் நோயாளி உட்பட ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற வந்த நோயாளியை இலக்குவைத்தே அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவனெல்ல பிரதேசத்தில் இருந்து வந்த நோயாளர், அந்த பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருடன் தவறான தொடர்பில் இருந்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவனே இவ்வாறு அசிட் வீசியுள்ளார்.

 அசிட் வீச்சு நடத்திய நபரை பேராதனை போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் இணைந்து பிடித்து பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சமில் ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜித் விஜேகோன் தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஷேன் செனவிரத்ன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X