2026 மே 06, புதன்கிழமை

நோர்வூடில் விடுதிக்கு சீல்

Editorial   / 2020 மார்ச் 24 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

 

நோர்வூட் பிரதேச சபையின் கீழ் பதிவு செய்யப்படாது, நோர்வூட் பகுதியில் இயங்கிவந்த சுற்றுலா விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் இருவரை அழைத்து வந்த வான் சாரதிக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் வந்து தங்கியிருந்ததாகக் கூறப்படும் சுற்றுலா விடுதியையே, பிரதேச சுகாதார பரிசோதகர்கள், நோர்வூட் பொலிஸ்,  நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தைவேலு உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கடந்த வாரம்,  இங்கிலாந்தில் இருந்து வந்த இருவர், காசல்ரீ பிரதேசத்திலுள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்துள்ளனர் என்றும் அவர்களை வானில் ஏற்றிவந்த சாரதி, இந்த விடுதியில் இரண்டு நாள்கள் தங்கியிருந்துள்ளார் என்றும் இதன்போது, விடுதியின் உரிமையாளரும் அவரது குடும்பத்தாரும் இந்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்த வந்தவர்கள் மீண்டும் அந்நாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், சாரதி மாத்திரம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை, நேற்று (23) கண்டுபிடிக்கப்பட்டது.

அவர், தற்போது கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சாரதி வழங்கியத் தகவலுக்கமையவே, இந்த விடுதிக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வீடுதியின் உரிமையாளரும் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களது வீடு, கராஜ் என்பவற்றுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .