Editorial / 2026 மார்ச் 13 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட முக்கிய கிராமிய கார்பெட் பாதைகளை மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்று பராமரிக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை (10) அன்று நோர்வூட் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான கே. குழந்தைவேல் ரவி கொண்டு வந்த இந்தப் பிரேரணைக்கு சபையின் அனைத்து உறுப்பினர்களும் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
நோர்வூட் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பின்வரும் பாதைகள் பல கோடி ரூபாய் செலவில் கார்பெட் இடப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளன:
இந்தப் பாதைகளைத் தொடர்ந்து பராமரிக்க பிரதேச சபையிடம் போதிய நிதி வசதி இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் வருமானம் குறைவாக உள்ள நிலையில், ஊழியர்களின் சம்பளத்திற்காக சபை ஒதுக்க வேண்டிய நிதியின் அளவு அதிகரித்துள்ளதாக உறுப்பினர் ரவி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இது 100% ஆக அதிகரிக்கப்படவுள்ள நிலையில், சபையின் அனாவசிய செலவுகளைக் குறைத்து வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கப்பட்டதால் சம்பளச் செலவு அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த வீதிகள் முறையான பராமரிப்பு இன்றி சேதமடைவதைத் தவிர்க்க, அவற்றை மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மாகாண பிரதம செயலாளருக்கு விரைவில் உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கவும் சபை தீர்மானித்துள்ளது.
சபைத் தலைவர் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தி, உரிய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago