2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

நிதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை கூட்டு எதிர்க் கட்சிகளின் சதி: இராதா

Sudharshini   / 2016 ஜூன் 13 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

'இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு கூட்டு எதிர்க் கட்சிகள் பல சதித்திட்டங்களை செய்து வருகின்றன. அதில்  ஒன்றே நம்பிக்கையில்லாப் பிரேரணையாகும். நாடாளுமன்றத்தில் அரங்கேறிய நம்பிக்கையில்லாப் பிரேரணை, நிதி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டதல்ல. இந்த அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டது' என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா, இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம்,  சாதாரண தரம் ஆகிய பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவரையும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவரையும் கௌரவிக்கும் நிகழ்வும், கட்டட திறப்பு விழாவும் இன்று (13)  காலை,  பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நிதி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை, எவ்வாறு நாம் தோற்கடித்தோமோ, அதேபோன்று இனிவரும் காலங்களில் கொண்டுவரப்படும் அனைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் தோற்கடிப்போம். நாம் ஒற்றுமையாக இருந்து செயற்படுவோம்' என்றார்.

'இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு, மலையக மக்கள் தயாராக இல்லை. மலையகத்தில் முன்னெடுக்கப்படும் கல்வி அபிவிருத்தியே இதற்கு சிறந்த உதாரணமாகும்' என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .