ஆ.ரமேஸ் / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா - இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகலவத்தை தோட்டத்தில், இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் என்று, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (08) இரவு இடம்பெற்ற இச்சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இருவரை, இராகலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு வீடுகளுக்கும் இடையிலான வேலிச் சண்டையே, இக்கொலைக்குக் காரணம் என்று, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago