2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

பூண்டுலோயா விபத்தில் மாணவர்கள் உட்பட ஐவர் காயம்

Janu   / 2025 செப்டெம்பர் 02 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து  மற்றும் முச்சக்கர வண்டியொன்று பூண்டுலோயா கய்ப்புக்கொலை பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (02) விபத்துக்குள்ளாகியுள்ளது

குறித்த  பேருந்து முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளதுடன் விபத்தின் போது பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் நால்வர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த 5 பேரும் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கௌசல்யா

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .