Editorial / 2019 ஒக்டோபர் 25 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரைட் அக்கரை தோட்டத்தின் ஏழு பிரிவுகளைச் சேர்ந்த 1400 பேர், திடீரென, இன்று(25) பணிபரிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
தங்களுக்கு வழங்கப்படும் மாதந்த முற்பணத்துடன் மேலதிகமாக 1,000 ரூபாய் வழங்குமாறு கோரிய போதும் தோட்ட நிர்வாம் அதனை வழங்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்தே, தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 9,000 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தை தொழிற்சாலையில் அரைப்பதற்கு மறுத்து, தொழிற்சாலையில் பணிப்புரிந்தோரும் வெளியேறியுள்ளனர்.
அரசாங்கமானது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15,000 ரூபாயை தீபாவளி முற்பணமாக வழங்குவதாக கூறியபோதும், 10,000 ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளது.
இதனால் தாம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, பணிப்பகிஷ்கரப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் தோட்ட உத்தியோகத்தர்களுக்கும் முற்பணம் வழங்காததால், அவர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago