R.Maheshwary / 2021 ஒக்டோபர் 24 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை- நாயபெத்த தோட்டம், கோணமுட்டாவ வீதியின் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், தெற்கு கெபில்லவெல- பண்டாரவளை என்ற முகவரியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் என பண்டாரவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பண்டாரவளை- மீரியகஹ சந்தியில் உள்ள வடிகானுக்கு அருகிலிருந்து மற்றுமொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், இச்சடலங்கள் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .