Editorial / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்
நோர்வூட் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஹநெலு கிராம சேவகர் பிரிவின் ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான சாமிமலை ஸ்டொக்கம் தோட்டத்தில் கடுமையான மழை காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமான மக்கள் பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 12ம் திகதி தங்க வைக்கப்பட்டனர்.
கடந்த ஐந்து நாட்களாக முகாமில் தங்க தங்க வைக்கப்பட்ட மக்களுடைய வீடுகளை பரிசோதனை செய்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் (NBRO) அறிக்கை வெளியிடப்படும் என சொல்லப்பட்டதன் பின்னர் உடனடியாக அந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை (16) அறிவுறுத்தி இருந்தார்கள்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி சரியான முறையில் இடம் பெறவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகம் குறைந்த பட்சம் நிலத்தையேனும் வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
56 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
59 minute ago
2 hours ago