எம். செல்வராஜா / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீடமைப்பு நிர்மானத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பதுளை மாவட்டத்துக்கு, இன்று (12) விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது, பிற்பகல் 1 மணிக்கு, அட்டாம்பிட்டிய பகுதியின் காவெலையில் நிர்மாணிக்கப்பட்ட “சுரக்ஷகம” எனும் மாதிரிக் கிராமத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கவுள்ளார்.
இந்த மாதிரிக் கிராமம், கம் உதாவ திட்டத்தின் 248ஆவது வீடமைப்புத் திட்டமாகும். இந்நிகழ்வைத் தொடர்ந்து, அட்டாம்பிட்டிய முன்றலிலும், பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்திலும் நடைபெறும் மாபெரும் கூட்டங்களிலும் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்நிகழ்வில், தொழில் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, அமைச்சர் ரவீந்திர சமவீர, இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அ. அரவிந்தகுமார், லக்சுமன் செனவிரத்ன, சமிந்த விஜயசிறி, ஊவா மாகாண சபை உறுப்பினர் ஜயந்த கன்னங்கர, தீபா வேலாயுதம் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago