2026 ஜனவரி 21, புதன்கிழமை

பதுளையில் புதிய தொழிற்சங்கம் உதயம்

Kogilavani   / 2021 மே 17 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளையைத் தலைமையகமாகக் கொண்டு, 'ஐக்கிய தொழிலாளர் முன்னணி' (UNITED WORKERS FRONT) என்ற பெயரில், புதியத் தொழிற்சங்கமொன்று உதயமாகியுள்ளது.

இதன் பொதுச்செயலாளராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் மகனான சுராஜ் அரவிந்தகுமார் செயற்பட்டு வருகின்றார்.

தொழில் திணைக்களத்தில் 9488 என்ற இலக்கத்தில், மேற்படித் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தொழிற்சங்கத்தின் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஐக்கிய மக்கள் முன்னணி (UNITED PEOPLES FRONT) என்ற பெயரில், அரசியல் பிரிவொனறும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் முன்னணியென்ற அரசியல் பிரிவை ஆரம்பிக்கும் முகமாக, அனைத்து ஆவணங்களும் தேர்தல் திணைக்களத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மேற்படி இரு அமைப்புகளின் பொதுச்செயலாளர் சுராஜ் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் உண்மையாகவும் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடன், செயல்படுவதற்கு தொழிற்சங்கமொன்றுக்கான வெற்றிடம் இருப்பதாகவும், அந்த வெற்றிடத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே, புதிய தொழிற்சங்கம் உதயமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X