2026 மே 07, வியாழக்கிழமை

பதுளையில் 7 மணித்தியாலங்களில் 41 பேர் நாய்க்கடிக்கு இலக்கு

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளையில் இன்று காலை 8 மணிமுதல் 3 மணிவரையானக் காலப்பகுதிக்குள், 41 பேர் நாய்க்கடிக்கு இலக்காகிய நிலையில், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர் என்று, வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் அநேகமானவர்கள், நன்கு பரீட்சயமான நாய்களிடமே கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரியவருகிறது.

முகக் கவசங்ளை அணிந்துகொண்டு வீதிகளில் பயணித்ததால், அதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக நாய்கள் இவர்களைக் கடித்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

வேட்டை நாய்களின் கடிக்குள்ளான சிலரும் இதில் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .