எம். செல்வராஜா / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை சரஸ்வதி தேசியக் கல்லூரியை அதி உயர்தரத்துக்குக் கொண்டு செல்வதற்குரிய அனைத்து வளங்களையும் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் தான் இறங்கியுள்ளதாகவம் ஆனால், அதற்கமைவாக மாணவர்கள், கல்வி, விளையாட்டுத் துறைகளில் அதிக சிரத்தைகளைக் காட்டி, முன்னணியில் திகழ்ந்து, “அவுட் புட்” களை ஏற்படுத்தி, சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டார்.
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கான பற்சிகிச்சை சுகாதார நிலையத் திறப்பு விழாவின் பின்னர், கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திடமிருந்து, ஆசிரிய வளம், கட்டட வளம், உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட அனைத்து வளங்களையும் எம்மால் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் ஆனால், அவ் வளங்களை பெற்றுக்கொடுக்கும் போது, அதன் பிரதிபலனாக, மாணவர்கள் கல்வி,விளையாட்டுத் துறைகளில் சாதனைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago