Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பதுளை பிரதேச சபையின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கம் போன்றே, பிறிதொரு பேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறித்து, பதுளை பொலிஸாருக்கும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பதுளை பிரதேச சபைக்கு களங்கள் விளைவிக்கும் வகையில், இந்தச் செயற்பாடுகள் இடம்பெறுவதாக கூறியே, இந்த முறைப்பாடுகளை, பதுளை பிரதேச சபையின் செயலாளர் டி.எ. தனபால, உத்தியோகப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.
பதுளை பிரதேச சபையின் பேஸ்புக் பக்கத்திலுள்ள உத்தியோகப்பூர்வ இலட்சினையைப் போன்று அமைந்த, சிறியதொரு மாற்றத்தைக் கொண்ட மற்றொரு பேஸ்புக் பக்கமே, இவ்வாறு செயற்பாட்டில் இருந்து வருவதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போலியான பேஸ்புக் மூலம், பதுளை பிரதேச சபையானது, செயற்பாடுகள் அற்ற ஒரு சபையாகக் காணப்படுகின்றது என்ற எண்ணத்தை, மக்கள் மத்தியில் தூண்டுவதாக அமைந்துள்ளது என்றும், இந்த போலி பேஸ்புக்கைத் தடை செய்து, இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், அந்த முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago