2026 ஜனவரி 21, புதன்கிழமை

பத்தனை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 39 பேருக்கு தொற்று

Kogilavani   / 2021 மே 19 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய நிலையத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார். 

சவூதி அரேபியா, ஓமான், கட்டார் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த இலங்கையர்கள் இந்த தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 112 பேருக்கு திங்கட்கிழமை(17) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கைகள் இன்று (19) கிடைக்கப்பெற்ற நிலையிலேயே, 39 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X