Kogilavani / 2021 ஜனவரி 08 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.சதீஸ்
பொகவந்தலாவை கியு மேற்பிரிவு தோட்டத்தில், 4 பிள்ளைகளின் தந்தையொருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்று, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தி, தனது வீட்டுத் தோட்டத்தில், பன்றிக்கு வலை அடிக்க முற்பட்ட போதே மேற்படி நபர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
பிரேதப் பரிசோதனைக்காக, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago