Editorial / 2024 மே 19 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்
பன்வில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்வில புற நகர்ப்பகுதியிலுள்ள வீடொன்றில் பாரிய கொள்ளைச் சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீட்டின் மேல் மாடியிலுள்ள யன்னலை உடைத்து தங்க நகைகளையும் பொருட்களையும் கள்வர்கள் சூட்சுமமாகக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பன்வில பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிலுள்ளவர்கள் தமது உறவினர் ஒருவரிடம் வீட்டைப் பார்த்துக்கொள்ளுமாறு ஒப்படைத்து விட்டு கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.
உறவினர்கள், 16,17 ஆம் திகதிகளில் வீட்டைப் பார்க்கச் செல்லாமல் 18 ஆம் திகதி சென்றபோது வீடு கொள்ளையிடப்பட்டதை அறிந்து பன்வில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
யன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் கீழ் மாடிக்கும் சென்று கதவுகளை உடைத்து தங்க நகைகளையும் பொருட்களையும் களவாடியிருப்பதோடு C.C.T.V கமெரா பொருத்தப்பட்டிருப்பதை அறிந்து D.V.R இயந்திரத்தையும் எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை பன்விலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago