Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் 21 பேருக்கு, நேற்று (02), கையொப்பம் இடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என, பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழமைபோன்றே சேவைக்கு வந்த தமக்கு, பலாங்கொடை இலங்கை போக்குவரத்து சபை நிர்வாகம் கையொப்பம் இடுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை என, முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர நியமனம் பெற்ற தாங்கள், கடந்த ஒரு வருடகாலத்துக்கு முன்னர் பதவி உயர்வு பெற்றதாகவும் மேற்படி பதவி உயர்வு, சட்டரீதியானது அல்ல என்று, டிப்போ நிர்வாகம் தெரிவித்து, தங்களுக்கு கையொப்பம் வைப்பதற்கு வாய்ப்பு வழங்கவில்லை என, அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பலாங்கொடை இலங்கை போக்குவரத்து சபை நிர்வாகத்தின் உத்தியோகத்தர் ஒருவரிடம் வினவியபோது, போக்குவரத்து அமைச்சின் பதில் தலைவரின் எழுத்துமூல அறிவித்தலில், இவர்களது பதவி உயர்வு சட்டத்துக்கு முரணானது என்று குறிப்பிடப்பட்டு இருந்தமையாலேயே, தாம் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் எனினும், பதவி உயர்வுக்கு முந்திய பதவி நிலைகளில் கையொப்பம் இடுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்தார்.
சுற்று நிருபத்துக்கு முரணான பதவி உயர்வு தொடர்பிலான கையொப்பப் புத்தகத்தில் கையொப்பம் இடுவது மட்டுமே இவர்களுக்கு மறுக்கப்பட்டதாகவும் ஆனால், பதவி உயர்வு சுற்று நிருபம், முரணமாக இருப்பதை, பணியாளர்கள் விளங்கிகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026