Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை, பளிங்கு மலை தோட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு, புதிய வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு, மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, 10 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யவுள்ளத என, அமைச்சர் திகாம்பரத்தின் நாடாளுமன்ற ஆய்வாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் கிறிஸ்டல்பார்ம் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மலையகத்தில் தொழிலாளர்கள் பாதிக்கப்படும்போது, முண்டியடித்துக்கொண்டு வரும் ஒரு சில அரசியல்வாதிகள், மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக, ஊடகங்களுக்கு மாத்திரமே கருத்து தெரிவிக்கின்றனர் என்றும் ஆனால் அவர்களால் இதுவரை மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுக்கமுடியவில்லை என்றும் கூறினார்.
எனினும் அமைச்சர் திகாம்பரம், மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக் கொடுத்து வருகிறார் என்றும் அந்த அடிப்படையில் பளிங்கு மலை தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு தனது அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் கூறினார்.
10 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago