Janu / 2024 டிசெம்பர் 03 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமான அனுமதிப்பத்திரம் மற்றும் விசா இன்றி நுவரெலியாவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த இந்தோனேசிய பிரஜைகள் 08 பேர் சந்தேகத்தின் பேரில் திங்கட்கிழமை (02) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பள்ளிவாசலுக்கு சென்று குறித்த பிரஜைகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்ததாகவும் விசாவை புதுப்பிப்பதற்காக அனைத்து ஆவணங்களையும் இலங்கையில் உள்ள தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 08 சந்தேக நபர்களும் நுவரெலியா வருவதற்கு முன்னர் ஹட்டன் மற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
25-65 வயதுக்குட்பட்ட குறித்த சந்தேக நபர்களுடன் மேலும் 191 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பல்வேறு பகுதிகளை பார்வையிட சென்றுள்ளதாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் இந்த நாட்டில் உள்ள இந்தோனேசிய தூதரக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களை நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் இவர்களுடன் இலங்கைக்கு வந்த ஏனைய 191 பேர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
34 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
57 minute ago
1 hours ago