Editorial / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பழிவாங்கும் அரசியலுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துணை போகாது எனத் தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இதற்கமையவே நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வாக்களிப்பில் கலந்துகொள்ளவல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொட்டகலையில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட ஆறுமுகன் தொண்டமான் எம்.பியிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் பங்கேற்காதமை குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து, அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஏற்கெனவே அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போதும், இந்த நிலைப்பாட்டைத் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடைபிடித்தது என, அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், "இது மக்களின் தீர்ப்பு" எனத் தெரிவித்த அவர், எனவே, மக்களின் தீர்ப்பே இறுதியானது எனவும், இது தொடர்பாக தாங்கள் சொல்வதற்கு என்ன இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025