Kogilavani / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ், எம்.கிருஸ்ணா
நாவலபிட்டி பஸ்பாகே கோரளையில் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படிப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த 15 மாணவர்கள், ஆசிரியை ஒருவர் உள்ளடங்களாக 22 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (6) வெளியான பிசிஆர் அறிக்கையின் முடிவுகளுக்கு அமையவே 22 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்படிப் பிரதேசத்தில் 112 பேருக்கு நேற்றைய (6) தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படித் தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago