Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 11 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பிபிலையிலிருந்து லுணுகலை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லுணுகலையிலிருந்து கொக்காகலை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது, கைக்காட்டி சந்தியில் வைத்து, பஸ்ஸுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் 25,30 வயதுடைய 2 இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த இருவரும் லுணுகலை பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் நடைபெற்ற உற்சவத்தில் கலந்து கொண்ட பின்னர், வீடு திரும்பும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
10 minute ago
34 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
34 minute ago
38 minute ago