செ.தி.பெருமாள் / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் பஸ் நிலையத்தால் நடத்தப்படும் சாமிமலை, ஹட்டன், மஸ்கெலியா ஆகிய பகுதிகளுக்கான இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் சேவைகள் இடம்பெறுவதில்லை என, பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காலை 6.15 மணிக்கு இடம்பெறும், பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவையும், ஒழுங்கான முறையில் இடம்பெறுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில், குறித்த சேவையில் ஈடுபட்டு வந்த பஸ்ஸின் சாரதி, மாரடைப்புக் காரணமாக உயிரிழந்ததையடுத்து, பஸ் சேவைகள் முறையாக இடம்பெறுவதில்லை என்றும் இதனால் பருவகால சீட்டை பெற்ற மாணவர்கள், பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிவனடிபாதமலை பருவமலை காலம் இடம்பெற்றும் வரும் நிலையில், அரச, தனியார் பஸ்கள் அனைத்தும், நல்லதண்ணி-ஹட்டன் சேவையை முன்னெடுத்து வருவதால், அப்பகுதியில் வசித்துவரும் மக்கள், தங்களது அன்றாடப் பிரயாணங்களை மேற்கொள்ள, சிரமப்பட்டு வருவதாக, புகார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .