கு. புஷ்பராஜ் / 2019 மார்ச் 25 , மு.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிந்துலை, எல்ஜின் தோட்டத்திலிருந்து தலவாக்கலை நகருக்குச் செல்வதற்கு, அதிகாலை வேளையில் பஸ்சேவை இல்லை என்றும் எனவே, உடனடியாக பஸ்சேவையை ஆரம்பிக்குமாறும் கோரி, எல்ஜின் தோட்ட மக்கள், எல்ஜின்-மெரயா வீதியில், நேற்று (24) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், எல்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
தலவாக்கலை நகருக்குச் செல்வதற்கு, அதிகாலை 5 மணியிலிருந்து 7.45 மணிவரை எந்த பஸ்களும் சேவையில் ஈடுபடுவதில்லை என்றும் இதனால், பாடசாலை மாணவர்கள், அரச,தனியார் ஊழியர்கள், வைத்தியசாலைகளுக்குச் செல்ல வேண்டிய நோயாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும், பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும் மெரயாவிலிருந்து ஆறு கிலோமீற்றர் தூரத்திலுள்ள திஸ்பனை சந்திக்கு, நடந்து சென்று, டயகமையிலிருந்து வரும் பஸ்களிலேயே ஏறிச் செல்ல வேண்டிய நிலையுள்ளதாகவும் வாடகைக்கு வாகனங்களை அமர்த்திச் செல்வதால், பாரியளவான கட்டணங்களை அறிவிட வேண்டியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
அதிகாலை வேளையில், முறையான பஸ் போக்குவரத்து இன்மையால் எல்ஜின், ஊவாக்கலை, தங்கங்களை, கேம்பிரி, லிப்பக்கலை, மெரயா, கவுலினா, என்போல்ட், சென்றெகுலர்ஸ், மிளகுசேனை உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட தோட்டங்களைச் சேர்ந்த மக்கள், பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில், நுவரெலியா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பலமுறை அறிவித்தப் போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக பஸ்சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
13 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago