Editorial / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷன்
லிந்துலை எல்ஜின் தோட்டத்துக்குச் செல்லும் வழியிலுள்ள பஸ் தரிப்பிடத்தை, புனரமைத்துத் தருமாறு, பிரதேச மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பஸ் தரிப்பிடம், கடந்த 30 வருடங்களுக்கு முன்னர், எல்ஜின் மேற்பிரிவு, கீழ்பிரிவு மக்களின் நன்மைக்காக நிர்மாணிக்கப்பட்டது என்றும் எனினும் தற்போது, குறித்த பஸ் தரிப்பிடத்தைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதால், பொதுமக்கள், மாணவர்கள், கர்ப்பிணிகள் என, அனைவரும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
கடுமையான மழை வானிலையின்போது, குறித்த பஸ்தரிப்பிடத்தில் ஒதுங்கக்கூட முடியாத நிலை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, இந்த பஸ் தரிப்பிடத்தைப் புனரமைத்துத் தருவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago