ஆ.ரமேஸ் / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராகலை புரூக்சைட் சந்தியில், கூரையற்ற நிலையில், மிக நீண்டகாலமாகக் காணப்படும் பஸ்தரிப்பு நிலையத்தைப் புனரமைக்க, வலப்பனை பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதேசவாசிகள், பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராகலையில் நிலவிய சீரற்ற காலநிலை காலமொன்றின் போது, இந்த பஸ்தரிப்பிடம் சேதமடைந்தது. இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக, இந்த பஸ் தரிப்பிடம் கூரையற்று காணப்படுவதகாவும் இதனால், கந்தப்பளை, இராகலை, ஹைபொரஸ்ட் பிரதேசங்களுக்குப் பயணிக்கும் பயணிகள், அதிகமான வெய்யில் காலங்களிலும் மழைக்காலங்களிலும் ஒதுங்கி நிற்கக் கூட முடியாத அளவுக்கு சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, வலப்பனை பிரதேச சபை, இது தொடர்பாக கவனம் செலுத்தி, கூரையொன்றை பொறுத்தி, புனரமைத்துத் தருமாறு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago