Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் சதீஸ்
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியினூடாக பயணிக்கும் தனியார் பஸ் நடத்துநர் ஒருவர் மீது, இனந்தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், பஸ் நடத்துநர், காயமடைந்த நிலையில், டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், 10 பேர் கொண்ட குழுவால், நேற்று (25) இரவு தாக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.
தனது கடமையை முடித்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும் போதே, கெர்க்கஸ்வோல்ட்ட கீழ்பிரிவு பகுதியில் வைத்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் சிலர், முகத்தை துணியால் மூடிக்கொண்டே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நோர்வூட், சென்ஜோன், டிலரி தோட்டத்தைச் சேர்ந்தவர்களே, இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என, பஸ் நடத்துநர், பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அத்துடன், நடத்துநரின் கையிலிருந்த பற்றுச்சீட்டு வழங்கும் இயந்திரமும் பணமும் பறித்துச்செல்லப்பட்டது என்றும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago