R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கணேசன்
நுவரெலியா பகுதியிலிருந்து லபுக்கலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த பஸ்ஸே நேற்று (14) மாலை
பஸ்ஸில் 30ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாகவும், விபத்தின் போது, 4 பேர் மாத்திரம் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
சாரதியால் பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 4 பேரும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


2 minute ago
12 minute ago
21 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
21 minute ago
48 minute ago