Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக், நதீக தயா பண்டார
கண்டி - தெல்தெனிய ரம்புக்கவல்ல பிரதேசத்தில், இன்று (22) பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில், 15 பேர் காயமடைந்த நிலையில், தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லூல் கந்துர பிரதேசத்தில் இருந்து தெல்தெனிய நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ், ரம்புக்வெல்ல பிரதேசத்தில், சுமார் 20அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மஹியஙகனை வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் விபத்துக்கு உள்ளாகி இருந்ததாகவும் விபத்துக்கு உள்ளனவரை பாதுகாப்பதற்கு முயற்சித்தபோதே, பஸ் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளதானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில், 15 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துத் தொடர்பில், தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago