Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 01 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
குருநாகல் - கண்டி பிரதான பாதையின், கலகெதரைப் பிரதேசத்தில், நேற்று (30) மாலை, தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 32 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பாரிய சரிவுப் பிரதேசமான இங்கு, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், வாகனங்களை கவனமாகச் செலுத்தும்படி தொடர்ந்து எச்சரிக்கை விடப்பட்டு வந்தபோதும், சிலர் அதனைக் கவனத்திற் கொள்ளாதுவிடுவதாலேயே, இவ்வாறு விபத்துக்கள் எற்படுவதாக, கலகெதரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கண்டி, கலகெதரை, கட்டுகஸ்தோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிலர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை, கலகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
27 minute ago
41 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
41 minute ago
43 minute ago
1 hours ago