Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அட்டன் பிரதான வீதியின் தெஹியோவிட்ட மாகம்மன பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (27) பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் பஸ்ஸின் சாரதி உட்பட 23 பேர் காயமடைந்த நிலையில், கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026