2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

பஹல கடுகண்ணாவ பகுதி பகல் திறக்கப்படும்

Editorial   / 2021 நவம்பர் 11 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்சரிவு அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதி இன்று (11) மீண்டும் திறக்கப்படும்.

நேற்றிரவு 10 மணியுடன் மூடப்பட்ட இந்த பகுதி, இன்று (11) பிற்பகல் 1 மணிக்கு திறக்கப்படும் என   கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய, தெரிவித்தார்.

பயணிகள் போக்குவரத்தை கருத்திற் கொண்டே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,  இலகுரக வாகனங்களுக்கு மாத்திரமே இந்த வீதியூடாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாற்று வீதியின் ஊடாகவே கனரக வாகனங்கள் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் அம்பேபுஸ்ஸ சந்தியில் திரும்பி குருணாகல், மாவத்தகம, கலகெதர, கட்டுகஸ்தொட்ட ஊடாக கண்டிக்கு பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர மாவனெல்லை நகரின் எஸ் ஓ சந்தியின் வலதுபுறமாக திரும்பி ஹெம்மாத்தகம, அம்புலுவாவ, கம்பளை, பேராதனை ஊடாக கண்டிக்கு பயணிக்க முடியும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X