Editorial / 2020 மே 20 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ். பி.சிவா, எஸ்.கணேசன், துவாரக்ஷன், எஸ். சதீஸ்
லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட நாகசேனை, நோனா தோட்டம், எக்கமுத்து கொலனியில், நேற்று (19) பிற்பகல் ஏற்பட்ட மண்சரிவில், எட்டு பேர் வசிக்கும் வீடு, முற்றாகப் பாதிப்படைந்தது.
இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அருகிலுள்ள வீடுகளில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட 42 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என, பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.கதிர்ச்செல்வன் தெரிவித்தார்.
இதன்படி லிந்துலை எகமுதுகம பகுதியில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும் ராணிவக்த பகுதியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும், பேர்ஹம் தோட்ட பகுதியில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அந்தந்த தோட்டங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சாமிமலை, ஓல்டன் கீழ்ப்பிரிவு தோட்டப் பகுதியில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட தத்தமது வீடுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை, இன்று (20) ஆரம்பித்தனர்.
தொடர்ந்து பெய்து வந்த கடும் மழை காரணமாக, குறித்தத் தோட்டத்தில் 30 குடியிருப்புகளைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாற்றுடைகள் கூட இல்லை என்றும் பிறப்புச் சான்றிதழல்கள் உள்ளிட்ட அனைத்து அனைத்து முக்கிய ஆவணங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
24 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
2 hours ago