2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்பு அமைச்சின் புதிய கெடுபிடியால் பிதுருதலாகல மலைக்குச் செல்வதில் சிக்கல்

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா- பிதுருதலாகல மலையுச்சியைப் பார்வையிடுவதற்காக, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைக் காரணமாக, தாம் பல ​அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக, நுவரெலியாவுக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் இந்த மலையுச்சியைப் பார்வையிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இல்லாத நிலையில், அண்மைக் காலமாக மலையுச்சிக்கு செல்பவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியை, கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், தொலைபேசி அல்லது வேறு எந்த முறையிலோ அனுமதியைப் பெறுவதற்கு முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடைமுறை தொடர்பிலான போதிய தெளிவின்மை காரணமாக, பிதுருதலாகல மலையைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள், ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகவும் குறைந்தது நுவரெலியாவில் சரி இந்த அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இந்த நடவடிக்கைக் காரணமாக, நாளொன்றுக்கு பாரியளவு நிதியை அரசாங்கம் இழப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக பிதுருதலாகல மலைப் பகுதிக்கு செல்வதற்கு,  சுற்றுலாப் பயணிகளுக்காக தடைவிதிக்கப்பட்டிருந்த போதிலும் ஒக்டோபர் மாதத்திலிருந்து, இந்தத் தடை நீக்கப்பட்டு தற்போது புதிதாக இந்த அனுமதிப்பத்திரம் விவகாரம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான முடிவுகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும்  சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .