Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2017 நவம்பர் 13 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
நீண்டகாலமாக புனரமைக்கப்படால் குன்றும் குழியுமாகக் காணப்படும் சாமிமலை மின்னா தோட்டப் பாதையை, புனரமைத்துத் தருமாறு கோரி, பிரதேச மக்கள் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாமிமலை -மஸ்கெலியா பிரதான வீதி, மின்னா சந்தியில், மேற்படி கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்பாதையை புனரமைப்பதற்காக, ஒரு வருடத்துக்கு முன்னர் பாதையில் கற்கள் குவிக்கப்பட்டன என்றும், ஆனால், இதுவரை வீதியைத் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்றும், பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தப் பாதையை, மின்னா மற்றும் சங்கரவத்தை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள், நாளாந்தம் பயன்படுத்தி வருகின்றனரென்றும் வீதி புனரமைக்கப்படாமையால் போக்குவரத்து செய்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
எனவே, வீதியை புனரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
45 minute ago
49 minute ago