மொஹொமட் ஆஸிக் / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டு இந்நாட்டில் இருந்த பாரிய கடனுக்கு மத்தியிலும் பாரியதொரு அபிவிருத்தியை மேற்கொள்ள, தற்போதைய அரசாங்கத்துக்கு முடிந்தது என்று, தபால் மற்றும் முஸ்லிம் சமய விவசாய அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
கண்டி, அங்கும்புரையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் போது, ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளை சரிவர நிறைவேற்ற முடியாமல் போனது என்றும் அப்போது, பாரிய தடைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது என்றும் அவர் கூறினார்.
இருந்தபோதிலும், தங்களது அரசாங்கம் எந்தவொரு தயக்கமும் காட்டாமல், இயன்றளவான சேவைகளை மக்களுக்கு வழங்கியது என்றும் கடந்த காலத்தில், ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்து, தனி அரசாங்கமாகச் செயற்பட்டதாலேயே, பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago