Editorial / 2023 ஜூலை 05 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு சொந்தமான மஸ்கெலியா ப்ரௌன்ஸ்வீக் தோட்ட எமலீனா பிரிவில், புதன்கிழமை (05) மதியம் 2 மணியளவில் கடும் மழையுடன் வீசிய கடும் காற்றின் போது தொழிலாளர்கள் குடியிருப்பு மீது சுமார் 200 அடி உயரம் கொண்ட கருப்பந்தேயிலை மரம் சரிந்து விழுந்துள்ளது.
இதனால் 4 குடும்பங்களை சார்ந்த 20 பேர் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அங்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பொலிஸார் தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து பாரிய மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர்.
நிர்க்கதிக்கு உள்ளானவர்களை, தற்காலிக குடியிருப்பு ஒன்றில் தோட்ட நிர்வாகம் தங்கவைத்துள்ளது.
சம்பவத்தில் சிறுகாயங்களுக்கு உள்ளான 70 வயதான நபர், மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago