2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பார்க் தோட்டத்தில் மூவரின் விளக்கமறியலும் நீடிப்பு

Kogilavani   / 2021 ஜனவரி 29 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

கந்தப்பளை பார்க் தோட்டத்தில் உதவி முகாமையாளரை தாக்கியக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு, நுவரெலியா நீதவான் நீதிமன்றம்  இன்று(29) உத்தரவு  பிறப்பித்தது.

கந்தப்பளை  பார்க் தோட்ட  அதிகாரிக்கு  எதிராக, கடந்த  (17) ஆம்  திகதி  முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில்  தோட்ட  உதவி  அதிகாரி  ஒருவர் தாக்கப்பட்டார். 

இது தொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவர்,  கடந்த  (21) ஆம்  திகதி  முதல்  விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா  மாவட்ட  நீதவான்  நீதிமன்றம் நீதவான்  பிரமோத ஜெயசேகர  இவ்வுத்தரவைப் பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X