Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 12 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மஸ்கெலியா, ப்ரெளன்ஸ்வீக் தோட்டத்தில் எமலின் பிரிவுக்கு செல்வதற்கு சாமிமலை ஓயாவை ஊடறுத்து 600 லட்சம் ரூபாய் செலவில் பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதன்மூலம் மக்களுக்கு உரிய பயன் கிட்டவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள வீதி புனரமைக்கபடாமல் உள்ளதாலேயே பாலத்தால் பயன் இல்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
மஸ்கெலியா - சாமிமலை பிரதான வீதிக்கு வருவதற்கான ப்ரௌன்ஸ்வீக் எமலின் தோட்ட வீதி கடுமையாக சேதமடைந்துள்ளது.
இதனை புனரமைப்பதற்கு பல வருடங்களாகியும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வீதியில் நடந்துசெல்வதற்கு கூட முடியாத வகையில் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு முச்சக்கரவண்டியில் செல்வதற்காக இருந்தால் கூட ஆயிரம் ரூபாய் அறிவிப்படுகின்றது என மக்கள் தெரிவிக்கின்றனர். வீதி புனரமைக்கப்படாததால் மாணவர்கள், அரச அதிகாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீதியை புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தாலும் அரசியல் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வீதியை விரைவில் புனரமைத்து தருமாறும் மக்கள் கோருகின்றனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago