2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 18 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தினூடாக மோர்சன், அயோனா, அலுப்புவத்தை தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதையில் அயோனா  தோட்ட மார்க்கத்தில் 100 வருடங்கள் பழமை வாய்ந்த பாலம் உடைந்து காணப்படுவதால், இப்பகுதியில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர். 

இதன் காரணமாக அயோன தோட்டத்தைச் சுற்றி இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதனால் நோயாளர்களை குறித்த நேரத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலைமை தோன்றியுள்ளது.

 இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கான பொருள்கள், கனரக வாகனங்களில் பாலத்தின் ஊடாக ஏற்றிச் சென்றதன் காரணமாகவே இப்பாலம் பழுதடைந்ததாக இப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் இப்பிரதேச மக்களின் நலன் கருதி, குறித்த பாலத்தினை புனரமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X